கர்நாடகத்தில் புதிதாக 1,456 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,456 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று 31 ஆயிரத்து 183 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 1,456 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 1,154 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். ராமநகர், யாதகிரி தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று உயிரிழப்பு இல்லை.
இதுவரை 39 லட்சத்து 94 ஆயிரத்து 627 பேர் பாதிக்கப்பட்டனர். 40 ஆயிரத்து 90 பேர் இறந்து உள்ளனர். நேற்று 1,096 பேர் டிஸ்சார்ஜ் ஆனார்கள். 8 ஆயிரத்து 848 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பாதிப்பு 4.66 சதவீதமாக உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.