டெல்லியில் மேலும் 137 பேருக்கு கொரோனா

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

Update: 2022-09-10 17:10 GMT

Image Courtesy : PTI 

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் இன்றைய கொரோனா வைரஸ் தொடர்பான விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 137 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 20 லட்சத்து 01 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 731 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே சமயம் டெல்லியில் இன்று194 பேர் கொரோனா சிகிச்சையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்

அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழப்பு பதிவாகவில்லை. இதனால், டெல்லியில் வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 491 என்ற அளவில் உள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்