ரெயில் நிலையங்கள் இல்லாத 132 மாவட்டங்கள் - இந்தியன் ரெயில்வே போட்ட மாஸ்டர் ப்ளான்..!
ரெயில் நிலையங்கள் இல்லாத 132 மாவட்டங்களை இந்திய ரெயில் பாதையுடன் இணைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
புதுடெல்லி,
நாடு முழுவதும் ரெயில் நிலையங்கள் இல்லாத 132 மாவட்டங்களை இந்திய ரெயில் பாதையுடன் இணைக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இந்திய ரெயில்வே வரைபடத்தில் இன்னும் இல்லாத மாவட்டங்களை கண்டறிய, இந்திய ரெயில்வே பிரதான் மந்திரி கிராமின் சதக் யோஜ்னா மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம் ஆகியவற்றிற்கு நிதி ஆயோக் பரிந்துரைத்திருந்தது.
அதன் அடிப்படையில் செயற்கைக்கோள் மேப்பிங் மூலம், ரெயில் நிலையங்கள் இல்லாத132 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த 132 மாவட்ட தலைநகரங்களையும் ரெயில்வே வரைபடத்துடன் இணைக்க, முதற்கட்டமாக திட்டறிக்கை தயாரிக்கும் பணிகளை இந்திய ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. அதன்படி குறிப்பிட்ட இந்த இடங்களுக்கு, அருகிலுள்ள ரெயில்வே இருப்பு பாதை கண்டறியும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டம் நிறைவு பெற்றால், இந்தியாவில் உள்ள ரெயில் நிலையங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 349 லிருந்து 7 ஆயிரத்து 400 ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.