சாலைகளில் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்விளக்கு அலங்காரம்

சிக்கமகளூரு மாவட்ட விழாவையொட்டி முக்கிய சாலைகளில் 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்ட உள்ளதாக நகரசபை தலைவர் வேணுகோபால் கூறினார்.

Update: 2023-01-11 18:45 GMT

சிக்கமகளூரு:-

சிக்கமகளூரு திருவிழா

சிக்கமகளூரு மாவட்ட திருவிழா வருகிற 18-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக எளிமையான முறையில் இந்த விழா கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு வெகு விமரிசையாக கொண்டாட வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது. மேலும் நகரசபைக்கு சில பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் குறித்து நகரசபை தலைவர் வேணுகோபால், கமிஷனர் பசவராஜ் ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் மற்றும் நகரசபை ஊரியர்களுடன் ஆலோசனை நடந்தது.

மின்விளக்கு அலங்காரம்

அப்போது பேசிய வேணுகோபால் கூறியதாவது:-

சிக்கமகளூரு திருவிழாவை கோலாகலமாக கொண்டாடவேண்டும். அதன்படி இந்த ஆண்டு விழா நடைபெறும் முக்கிய இடமான சிக்கமகளூரு மகாத்மா காந்தி ரோடு, இந்திரா காந்தி ரோடு, பசவனஹள்ளி மார்க்கெட் ரோடு உள்பட 13 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையின் இருபுறமும் மின் விளக்குகளால் அலங்கரிக்க வேண்டும்.

முக்கிய வீதிகளில் இருக்கும் கடைகளில் உரிமையாளர்களே மின் விளக்குகளை வாங்கி பொறுத்தவேண்டும். சாலையில் தோரணங்கள், வாழை, மா இலைகள் கொண்டு தோரணம் அமைத்து கொள்ளலாம். இதற்கென பொது மக்களுக்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் வண்ண கோலங்களிட்டு அலங்கரிக்கவேண்டும். இந்த பணியில் யார் வேண்டுமென்றாலும் ஈடுபடலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்