கர்நாடகத்தில் புதிதாக 1,151 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,151 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு: கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் இன்று 25 ஆயிரத்து 481 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 1,151 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 910 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 837 பேர் குணம் அடைந்தனர். 9 ஆயிரத்து 162 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.