ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 11,133 பேர் பணி நிரந்தரம்; சட்டசபையில் கர்நாடக அரசு அறிவிப்பு

ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் 11,133 பேர் பணி நிரந்தரம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சட்டசபையில் கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

Update: 2022-09-20 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிவடைந்ததும் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் தாமாக முன்வந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அவர் பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் பெங்களூரு உள்பட உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர். அவர்களின் கோரிக்கையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பரிசீலித்தார். அதன் அடிப்படையில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் 11 ஆயிரத்து 133 ஒப்பந்த தூய்மை பணியாளர்களை பணிநிரந்தரம் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் பெங்களூரு மாநகராட்சியில் 3 ஆயிரத்து 673 பேரும், பிற மாநகராட்சிகளில் 1,927 பேரும், பிற நகரசபைகள், புரசபைகள், பட்டண பஞ்சாயத்துகளில் பணியாற்றி வரும் 5, 533 பேரும் அடங்குவர். நானும் அவா்கள் சார்ந்த சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் அரசின் இந்த முடிவு எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இவ்வாறு கோவிந்த் கார்ஜோள் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்