டெல்லியில் 2021-ம் ஆண்டில் இணையவழி குற்ற வழக்குகள் 110% உயர்வு

டெல்லியில் 2021-ம் ஆண்டில் இணையவழி குற்ற வழக்குகளின் எண்ணிக்கை 110%க்கும் கூடுதலாக உயர்ந்து உள்ளன.

Update: 2022-08-31 06:09 GMT



புதுடெல்லி,



டெல்லியில் இணையவழி குற்ற வழக்குகளின் எண்ணிக்கை முந்தின ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த 2021-ம் ஆண்டில் 111 சதவீதம் உயர்ந்து உள்ளது என தேசிய குற்ற ஆவணங்கள் வாரியம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.

இவற்றில் பாலியல் சார்ந்த துன்புறுத்தல் வழக்குகள் அதிகம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இணையவழி குற்றங்களை எதிர்கொள்வதற்கு ஏதுவாக, டெல்லி போலீசார் சமூக ஊடக மையம் ஒன்றை அமைத்து உள்ளனர். எனினும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இந்த வழக்குகளில் பெருமளவில், இணையவழி மோசடி, ஆன்லைன் துன்புறுத்தல் மற்றும் பாலியல் தகவல்களை பகிருதல் ஆகியவற்றுடன் தொடர்புடைய விசயங்களே காணப்படுகின்றன.

கடந்த ஆண்டு, 356க்கும் கூடுதலான இணையவழி குற்ற சம்பவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இவற்றில் குற்றச்சாட்டுக்கு உள்ளான பலரும், பாலியல் செயல்கள் சார்ந்த தகவல்கள் அல்லது வீடியோக்கள் உள்ளிட்ட விசயங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

இந்த விவரங்களை பகுப்பாய்வு செய்ததில், குற்ற சம்பவங்களுக்கான நோக்கங்கள் ஆனது, மோசடி, பாலியல் துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் ஆகியவையாக இருந்துள்ளன. புகார்கள் அளித்தவர்களில் பலர் 12 முதல் 17 வயதுக்கு உட்பட்ட டீன்-ஏஜ் சிறுமிகளாக உள்ளனர்.

இதுபற்றி துணை காவல் ஆணையாளர் (இணையவழி குற்றம்) கே.பி.எஸ். மல்கோத்ரா கூறும்போது, கொரோனாவுக்கு பின்னர் நாங்கள் அதிகளவில் வழக்குகளை ஆன்லைன் வழியே பதிவு செய்து வருகிறோம்.

இவற்றில், நிதி மோசடி மற்றும் பாலியல் சார்ந்த மிரட்டல்கள் அதிகரித்து வருவதனை காண்கிறோம். புகார்களின் அடிப்படையில் மட்டுமே வழக்குகளை எடுக்காமல், சமூக ஊடக பதிவுகளை கவனத்தில் கொண்டும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்