ஜம்மு-காஷ்மீரில் பஸ் கவிழ்ந்து விபத்து: 10 பேர் பலி; 57 பேர் படுகாயம்
பேருந்து, ஜாஜ்ஜார் கோட்லி அருகே ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீரில் அமிர்தசரஸில் இருந்து கத்ராவில் உள்ள கோவிலுக்கு பக்தர்கள் சென்ற பேருந்தில் பேருந்துகொண்டிருந்தனர். அப்போது ஜாஜ்ஜார் கோட்லி அருகே ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பாலத்தில் இருந்து பேருந்து சறுக்கி ஆழமான பள்ளத்தில் விழுந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 57 பயணிகள் காயமடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.