10 கிலோ பாலித்தீன் பைகள் பறிமுதல்
புதுவையில் மோட்டார் சைக்கிளில் விற்பனைக்கு எடுத்து சென்றவரிடம் 10 கிலோ தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
புதுச்சேரி
மோட்டார் சைக்கிளில் விற்பனைக்கு எடுத்து சென்றவரிடம் 10 கிலோ தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
தடை செய்யப்பட்ட...
புதுவையில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பாலித்தீன் பைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இவற்றை உற்பத்தி செய்த தொழிற்சாலைகளிலும் ஆய்வு நடத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டன. இருந்தபோதிலும் தடை செய்யப்பட்ட பைகளின் நடமாட்டம் அதிகமாகவே உள்ளது.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் இருந்து இந்த பைகள் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ், மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் ஆகியோர் மூலக்குளம் சந்திப்பில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
10 கிலோ
அப்போது வில்லியனூரில் இருந்து இருசக்கர வாகனத்தில் வந்த மோகனசுந்தரம் என்பவரை மடக்கிய அவர்கள் சோதனை நடத்தியபோது அவர் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகளை விற்பனைக்கு கொண்டுவருவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரிடமிருந்து 10 கிலோ பாலித்தீன் பைகள் மற்றும் அவர் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிளையும் அவர்கள் பறிமுதல் செய்தனர்.