பெண் குற்றவாளிக்கு மோசடியாக ஜாமீன் வாங்கி தர ரூ.1 கோடி லஞ்சம்; பஞ்சாப் ஏ.ஐ.ஜி. கைது

பெண் குற்றவாளிக்கு மோசடி செய்து ஜாமீன் வாங்கி தர ரூ.1 கோடி லஞ்சம் பெற்ற பஞ்சாப் ஏ.ஐ.ஜி. கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-10-06 15:28 GMT



சண்டிகர்,


பஞ்சாப்பில் உதவி ஐ.ஜி.யாக பணியில் இருப்பவர் ஆஷிஷ் கபூர். இவர் பெண் குற்றவாளி ஒருவருக்கு மோசடி செய்து வழக்கு ஒன்றில் இருந்து ஜாமீன் வாங்கி தருவதற்கான மோசடி வேலையில் ஈடுபட்டு உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

அவர் அமிர்தசரஸ் நகரில் மத்திய சிறையில் சூப்பிரெண்டாக பணியில் இருந்தபோது, 2016-ம் ஆண்டில் பூனம் ராஜன் என்ற பெண் கைதியை அணுகியுள்ளார். நீதிமன்ற காவலில் இருந்த அந்த பெண்ணுடன், ஜிராக்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்டு அவரது தாயார் பிரேம் லதா, சகோதரர் குல்தீப் சிங் மற்றும் மற்றொரு உறவினரான பிரீத்தி ஆகியோர் போலீசாரின் காவலில் இருந்தனர்.

இதனால், ஆஷிஷ் கபூர் அந்த காவல் நிலையத்திற்கு சென்று பூனமின் தாயார் லதாவிடம் ஜாமீன் வாங்கி தர உதவுகிறேன் என கூறியுள்ளார். கோர்ட்டில் இருந்தும் விடுவிக்கிறேன் என கூறியுள்ளார்.

இதற்கேற்றாற் போன்று, அந்த காவல் நிலைய உயரதிகாரியான பவன் குமார் மற்றும் உதவி காவல் ஆய்வாளர் ஹர்ஜீந்தர் சிங் ஆகியோரையும் அணுகியுள்ளார். அவர்களிடம் இந்த வழக்கில் பிரீத்தி ஒன்றும் தெரியாத அப்பாவி என கூறும்படி கேட்டு கொண்டார்.

இதற்கு ஈடாக, பல்வேறு காசோலைகளின் வழியே பிரேம் லதாவிடம் இருந்து ரூ.1 கோடி வரை பணம் பெற்றுள்ளார். அதனை தனக்கு தெரிந்த நபர்களின் பெயர்களில் டெபாசிட் செய்துள்ளார். இதன்பின், உதவி காவல் ஆய்வாளர் ஹர்ஜீந்தர் சிங் வழியே அவற்றை பணம் ஆக மாற்றியுள்ளார்.

சமீபத்திய வன துறை ஊழலில் இவர் சிக்கினார். 2 முன்னாள் மந்திரிகள் உள்பட மூத்த அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவானது. இதனை தொடர்ந்து, பஞ்சாப் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ஆஷிஷ் கபூரை இன்று கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்