ஆசிரியர் தகுதி தேர்வில் மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் தேர்வு

ஆசிரியர் தகுதி தேர்வில் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த 3 பேர் தேர்வாகியுள்ளனர்.

Update: 2022-11-19 18:45 GMT

பெங்களூரு-

கர்நாடகத்தில் பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் பட்டதாரி தொடக்க ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு முடிந்தது. அந்த தேர்வு முடிவுகளை மந்திரி பி.சி.நாகேஸ் வெளியிட்டார். அதில் 13 ஆயிரத்து 363 பேர் இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்த நிலையில் ஆசிரியர் தேர்வில் இந்த ஆண்டு முதல் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 1 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதில் 3-ம் பாலினத்தை சேர்ந்த 3 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதாவது, சிக்பள்ளாப்பூரை சேர்ந்த சுரேஷ் பாபு, மதுகிரியை சேர்ந்த ரவிக்குமார், ராய்ச்சூரை சேர்ந்த அஸ்வத்தாமா ஆகிய மூன்றாம் பாலினத்தவர் 3 பேர் இடம்பெற்றுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்