துப்பாக்கி விற்ற 2 ரவுடிகள் சிக்கினர்

துப்பாக்கி விற்ற 2 ரவுடிகள் சிக்கினர்.

Update: 2022-11-08 18:45 GMT

பெங்களூரு: பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கி விற்க முயன்ற 2 ரவுடிகளை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் ஹெண்ணூரை சேர்ந்த முகமது அராபர் மற்றும் முகமது சாதத் என்று தெரிந்தது. இவர்களில் முகமது அராபர், மும்பையில் இருந்து குறைந்த விலைக்கு துப்பாக்கியை வாங்கி வந்து, அதனை முகமது சாதத்திடம் விற்பனை செய்தது தெரியவந்தது.

கைதான 2 பேர் பெயரும் ஹெண்ணூர் போலீஸ் நிலையத்தில் ரவுடி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. அவர்களிடம் இருந்து ஒரு துப்பாக்கி, 4 குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேர் மீதும் ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்