உடல்நலக்குறைவால் பிரபல இயக்குனர் மரணம்
Famous director dies due to ill health
பெங்களூரு: கன்னட திரை உலகில் முன்னணி இயக்குனராக இருந்து வந்தவர் முரளி கிருஷ்ணா(வயது 63). இவர் ஆரம்ப காலத்தில் வக்கீலாக தனது பணியை தொடங்கி உள்ளார். பின்னர், சினிமா துறையில் கால் பதித்தார். இவர் பல்வேறு கன்னட படங்களை இயக்கி வெற்றி இயக்குனராக வலம் வந்தார். இந்த நிலையில் மூளை பாதிப்பு நோயால் அவர் அவதிப்பட்டார். இதற்காக அவர் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முரளி கிருஷ்ணாவின் இறுதிச்சடங்கு சககார நகரில் உள்ள அவரது வீட்டில் நடைபெற உள்ளது. அவரது இறப்பு கன்னட திரை உலகை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.