கோவில்பட்டியில் திமுக அரசு ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்பு

கோவில்பட்டியில் நடந்த திமுக அரசு ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார்.

Update: 2022-05-18 15:11 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டி காந்தி மைதானம், அண்ணா திடலில் நகர தி.மு.க சார்பில் அரசு ஓராண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகர செயலாளர் கருணாநிதி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் முருகேசன், சின்ன பாண்டியன், கருப்பசாமி முன்னிலை வகித்தார்கள். அரசு வக்கீல் எம். இராமச்சந்திரன் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், அமைச்சர்கள் முதல் அரசு அதிகாரிகள் வரை பம்பரம் போல பணியாற்ற வைக்கிறார் தமிழக முதல்-அமைச்சர்.  அ.தி.முக ஆட்சி காலத்தில் வெளி மாநிலத்தினை சேர்ந்தவர்கள் அரசு வேலை பெறும் நிலை இருந்தது. தி.மு.க ஆட்சி பொறுப்பு ஏற்றதும் அரசு பணியில் சேர தமிழ் பாடம் அவசியம் என்று முதல்-அமைச்சர் அறிவித்தார். இதனால் தமிழகத்தில் தமிழக இளைஞர்களுக்குத்தான் அரசு பணி என்பதனை உறுதி செய்தார். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப் படுகிறது என்றார். கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் பவானி கண்ணன், தா. தமிழ் கொண்டான், மாநில விவசாய அணி செயலாளர் அ.சுப்பிரமணியன், கோவில்பட்டிபஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், மாவட்ட துணைசெயலாளர் ஏஞ்சலா, மாநில பொதுக்குழு உறுப்பினர் என். ராதாகிருஷ்ணன், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் இராமர், மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.எஸ்.ஏ. இராஜகுரு, நகர அவைத்தலைவர் முனியசாமி, மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ஆர். ரமேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் செல்வ மணிகண்டன், நகர இளைஞரணி அமைப்பாளர் கா. மகேந்திரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணி மற்றும் நிர்வாகிகள் பேசினார்கள்.

மேலும் செய்திகள்