கோத்தகிரியில் பரபரப்பு குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச்செல்ல முயன்ற சிறுத்தை

கோத்தகிரியில் பரபரப்பு குடியிருப்புக்குள் புகுந்து வளர்ப்பு நாயை கவ்விச்செல்ல முயன்ற சிறுத்தை

Update: 2022-05-18 14:46 GMT
கோத்தகிரி

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனவிலங்குகளின் நடமாட்டம் வெகுவாக அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் கோத்தகிரி அருகே கேர்பெட்டா பகுதியில் அமைந்துள்ள சசிகுமார் என்பவர் வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் தொடர்ந்து குரைத்தபடி இருந்துள்ளது. திடீரென நாயின் சத்தம் நிற்கவே, சந்தேகமடைந்த சசிகுமார் தனது வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளைப் பார்த்தார்.அப் போது சிறுத்தை ஒன்று தனது வீட்டின் வாசலில் வளர்ப்பு நாயின் கழுத்தை கவ்விக் கொண்டு நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் ஜன்னல் வழியாக சத்தம் போட்டார். இதனால் சிறுத்தை நாயை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிச் சென்று மறைந்தது. சிறுத்தை கடித்ததால் வளர்ப்பு நாயிற்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது. தொடர்ந்து வளர்ப்பு நாய்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் இந்த கண்காணிப்பு கேமரா பதிவுகள் வெளியானதையடுத்து அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். இதையடுத்து சசிகுமார் இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்குத் தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் கோத்தகிரி வனத்துறையினர் அந்த பகுதியில் கண்காணிப்பு  பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்