தூத்துக்குடியில் 54 டாஸ்மாக் கடைகள் மூடல்: கலெக்டர் செந்தில்ராஜ்

தூத்துக்குடியில் 54 டாஸ்மாக் கடைகள் வருகிற 22-ந் தேதி மூடப்படும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-18 14:41 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் 4-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வருகிற 22-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) தூத்துக்குடி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள 54 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருக்க வேண்டும். தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி மதுபான விற்பனை தடை செய்யப்பட்டு உள்ளதால், அன்றைய தினம் மதுவிற்பனை நடக்க கூடாது.
அன்றைய தினம் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தமிழ்நாடு மது விலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்