குன்னூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீர்
குன்னூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
குன்னூர்
குன்னூரில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் கழிவுநீரால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
கழிவுநீர்
குன்னூர் நகராட்சியின் 30 வார்டுகளுக்கும் தேவையான குடிநீர் ரேலியா அணை, ஜிம்கானா தடுப்பணை, கரன்சி குடிநீர் திட்டம் போன்ற குடிநீர் ஆதாரங்கள் மூலம் வழங்கப்படுகிறது. இந்த குடிநீர் ஆதாரங்களிலிருந்து வரும் குடிநீர் கிரேஸ்ஹில்லில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு வரப்படுகிறது.
இவ்வாறு கொண்டு வரப்படும் குடிநீர் அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்டு குழாய்கள் மூலம் வார்டுகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன சுத்திகரிப்புக்கு பின்னர் எஞ்சியுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு தொட்டியிலிருந்து வெளியேற்றப் படுகிறது. கிரேஸ்ஹில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கழிவு நீர் தொட்டிகளிலிருந்து வெளியேற்றப்பட்டது.
சாலையில் தேங்கியது
இந்த கழிவுநீர் சிம்ஸ் பூங்கா சாலை, பி.எஸ்.என்.எல். முன்புறம் உள்ள சாலை ஆகியவற்றில் தேங்கியது. இதனால் அங்கு கழிவு நீரின் துர்நாற்றம் வீசியது. துர்நாற்றத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி சிம்ஸ் பூங்காவிற்கு வந்த சுற்றுலாமயணிகளும் பாதிக்கப்பட்டனர். மேலும் வாகன ஓட்டிகள் அந்த சாலை வழியாக செல்ல முடியாமல் தவித்தனர். எனவே இது போன்ற சம்பவங்கள் நிகழாமல் தடுக்க கால்வாய் அமைத்து அதில் பாதுகாப்பான முறையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.