அரசு பஸ்-ஆட்டோ மோதி விபத்து
கீழ்பென்னாத்தூரில் அரசு பஸ்-ஆட்டோ மோதிக்கொண்டதில் 2 பேர் காயம் அடைந்தனர்.
கீழ்பென்னாத்தூர்
திருவண்ணாமலையில் இருந்து சென்னையை நோக்கி கீழ்பென்னாத்தூர் வழியாக அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. கடலாடி குளத்தில் இருந்து கீழ்பென்னாத்தூரை நோக்கி ஒரு ஆட்டோ வேகமாக வந்தது.
கீழ்பென்னாத்தூர்-திண்டிவனம் சாலையில் சென்று கொண்டிருந்த ஒரு அரசு பஸ்சும், ஆட்டோவும் நேருக்கு ேநர் மோதிக்கொண்டன. அதில் பஸ்சின் பக்க வாட்டில் சேதம் ஏற்பட்டது.
ஆட்டோவை ஓட்டி வந்த டிரைவர் ஜேம்ஸ் (வயது 30), ஆட்டோவில் பயணம் செய்த அருமைசெல்வம் (41) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் சிகிச்சைக்காக திருவண்ணாமலை மாவட்ட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். விபத்து குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.