கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது

Update: 2022-05-17 22:01 GMT
நெல்லை:
பாளையங்கோட்டை போலீசார் மூளிக்குளம் - வெள்ளக்கோவில் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த ஒருவர் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றார். உடனே அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் பாளையஞ்செட்டிக்குளத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது 27) என்பதும், அவர் கஞ்சா விற்று கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து தங்கராஜை கைது செய்து, அவரிடமிருந்து 10 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்