நாங்குநேரி அருகே கிராம மக்கள் தர்ணா போராட்டம்

நாங்குநேரி அருகே கிராம மக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்

Update: 2022-05-17 21:55 GMT
இட்டமொழி:
நெல்லை அருகே கல்குவாரியில் பாறை சரிந்து விழுந்து இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இடிபாடுகளுக்குள் சிக்கிய அனைவரையும் மீட்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாங்குநேரி அருகே இளையார்குளத்தில் கிராம மக்கள் நேற்று திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பருத்திக்கோட்டை நாட்டார் சங்க தலைவர் சிதம்பரம், பொருளாளர் முருகையா, த.ம.மு.க. ஒன்றிய தலைவர் சுதாகர், சிங்கநேரி பஞ்சாயத்து தலைவர் முத்துசொர்ணம் சண்முகசுந்தரம், ஒன்றிய கவுன்சிலர் செந்தூர்பாண்டியன், மற்றும் இளையார்குளம், காக்கைகுளம், ஆயர்குளம், உன்னங்குளம், கடம்பன்குளம், எடுப்பல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்