மகாத்மா காந்தியின் பாடத்தையும் நீக்குவார்கள்-டி.கே.சிவக்குமார் கண்டனம்
மகாத்மா காந்தியின் பாடத்தையும் நீக்குவார்கள் என டி.கே.சிவக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்
பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் விடுதலை போராட்ட வீரர் பகத்சிங்கின் பாடம் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது ஒரு தேச விரோத செயல்.
இன்று பகத்சிங், நாளை மகாத்மா காந்தியின் பாடத்தை நீக்குவார்கள். ஆங்கிலேயர்களின் அடிமைத்தனத்தில் இருந்து நம்மை விடுவித்தவர்களின் தியாகம் எப்போதும் மறக்க முடியாதது. நாட்டிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்களின் பாடங்களை நீக்குவதை கண்டிக்கிறேன்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.