புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து

புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டது.

Update: 2022-05-17 20:57 GMT

அரியலூர்:

அரியலூரில் இருந்து மருதையான்கோவில், நல்லரிக்கை, துங்கபுரம், வயலப்பாடி, ஓலைப்பாடி வழியாக வேப்பூர் அரசு மகளிர் கலை கல்லூரி வரையிலான புதிய வழித்தடம் மற்றும் கூடுதல் பஸ் வசதியை, குன்னம் அருகே நடந்த விழாவில் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். இந்த பஸ் அரியலூரில் இருந்து தினமும் காலை 8.30 மணிக்கு புறப்பட்டு சுமார் ஒரு மணி நேரத்தில் வேப்பூர் சென்றடையும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு அதே வழித்தடத்தில் அரியலூர் வந்து சேரும்.

மேலும் செய்திகள்