சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபருக்கு வலைவீச்சு
நன்னிலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபரை போலீசார் வலைவீச்சி தேடி வருகின்றனர்.
நன்னிலம்:
குடவாசல் அருகே திருெமய்ஞானம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் திருமாவளவன்(வயது22). இவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை ஒரு கோவிலுக்கு அழைத்து சென்று அங்கு அவருக்கு தாலிக்கட்டியதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த சிறுமி தற்போது கர்ப்பமாக உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி நன்னிலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருமாவளவனை வலைவீசி தேடி வருகின்றனர்.