மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடத்த கோரிக்கை

கீழக்கரையில் மருத்துவ காப்பீடு திட்ட முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்து உள்ளது.

Update: 2022-05-17 19:35 GMT
கீழக்கரை,

கீழக்கரையில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.கீழக்கரையை சுற்றி காஞ்சிரங்குடி, நத்தம், கும்பிடுமதுரை, புல்லந்தை உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இந்த நிலையில் கீழக்கரை பகுதி மக்கள் மருத்துவ காப்பீடு திட்டத்துக்கு புதிதாக பதிவதாக இருந்தால் கீழக்கரையில் இருந்து 20 கிலோமீட்டர் தூரம் உள்ள ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு செல்லும் நிலை தான் இருந்து வருகிறது. இதனால் முதியவர்கள் மற்றும் ஏழை எளிய மக்கள் மருத்துவ காப்பீடு திட்டம் கிடைக்க பெறாமல் அவதி அடைந்து வருகின்றனர். முதியோர்கள் மற்றும் ஏழை, எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழக்கரையில் மருத்துவ காப்பீடு திட்டம் நடத்த கோரியும் நிரந்தரமாக கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் மருத்துவ காப்பீடு திட்டம் புதிதாக பதிவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்