சேதுபாவாசத்திரம்:
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கைவனவயல் கிராமத்தில் கூட்டுறவு மற்றும் உணவு வழங்கல் துறை சார்பில், பகுதி நேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பகுதி நேர ரேஷன்கடையை திறந்து வைத்து பேசினார். இதில் தாசில்தார் சுகுமார், சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் முத்துமாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர் நெப்போலியன், ஊமத்தநாடு ஊராட்சி மன்றத்தலைவர் குலாம் கனி மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.