வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் தப்பி ஓட்டம்
வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்ட சிறுவன் தப்பி ஓடிவிட்டார்.
திருச்சி, மே.18-
திருச்சி பாலக்கரை பகுதியில் நடந்த வழிப்பறி வழக்கில் கூனிபஜார் கோரிமேடு பகுதியை சோ்ந்த 17 வயதுசிறுவனை பாலக்கரை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிறுவனை திருச்சி கீழபுலிவார்டு சாலையில் உள்ள அரசு கூர்நோக்கு இல்லத்தில் போலீசார் தங்க வைத்தனர். பின்னர், குழந்தைகள் நல அதிகாரி உத்தரவின் பேரில், கடந்த மாதம் 25-ந்தேதி கரூர் பைபாஸ் சாலையில் உள்ள சொந்தம் சிறார் வரவேற்பு மையத்தில் அந்த சிறுவன் ஒப்படைக்கப்பட்டார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் அந்த சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து, அந்த மையத்தின் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் மனோகர் கோட்டை போலீஸ் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சிறுவனை தேடி வருகிறார்கள்.