ஆர்ப்பாட்டம்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேத்தூர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-17 19:12 GMT
ராஜபாளையம்,
 ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் பகுதியில் மணல் கடத்தியதாக சில தினங்களுக்கு முன்பு வருவாய்த் துறையினர் சேத்தூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ராஜா மீது வழக்குப்பதிவு செய்தனர். இதை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேத்தூர் பஸ் நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் கணேசமூர்த்தி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் லிங்கம், மாநில நிர்வாக குழு உறுப்பினர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் பகவத்சிங், நகர செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் மணல் கடத்தலில் பொய் வழக்கு போட்டதாக வருவாய்த்துறை அதிகாரிகளை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்