மூத்த மகள் சிகிச்சை பலனின்றி சாவு
கொரடாச்சேரி அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில், மூத்த மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கொரடாச்சேரி:
கொரடாச்சேரி அருகே குடும்ப பிரச்சினையில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலைக்கு முயன்றதில், மூத்த மகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
குடும்ப தகராறு
திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகில் கடம்பங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விஜய். இவருடைய மனைவி அனுப்பிரியா (வயது 32). இவர்களுடைய மகள்கள் பாலஸ்ரீ (11), மதுஷா (7). விஜய் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.
வெளிநாட்டில் உள்ள விஜய்க்கும், அனுப்பிரியாவுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
குழந்தைகளுக்கு விஷம் கொடுத்தார்
கணவன், மனைவி இருவரும் செல்போனில் சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அனுப்பிரியா கடந்த 13-ந் தேதி வீட்டில் இருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து தனது 2 குழந்தைகளுக்கும் கொடுத்துள்ளார்.
பின்னர் அந்த விஷத்தை தானும் குடித்துள்ளார். இதனால் அவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளனர்.
மூத்த மகள் சிகிச்சை பலனின்றி சாவு
இதை பா்ாத்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிச்சைக்காக 108 ஆம்புலன்சு மூலம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் அனுப்பிரியாவின் மூத்த மகளான பாலஸ்ரீ சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொரடாச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அனுப்பிரியாவுக்கும், அவரது இளைய மகள் மதுஷாவுக்கும் தொடர்நது சிகிச்சை பெற்று வருகின்றனர்.