பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம்

பணிநீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

Update: 2022-05-17 18:55 GMT
 திருவெறும்பூர்,மே.18-
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் கடந்த 2019-ம் ஆண்டுக்கு முன்பு நியமனம் செய்யப்பட்ட சுமார் 150 பேர், 18 ஆண்டுகளாக துப்பாக்கி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் புதிதாக கான்ட்ராக்ட் எடுத்த நிறுவனம் பழைய தொழிலாளர்களை நீக்கிவிட்டு புதிய தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது. அதனைத் தொடர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில்  அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது. எனவே புதிதாக கான்ராக்ட் எடுக்கும் நிறுவனம்  ஒப்பந்த தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர். இது தொடர்பாக திருவெறும்பூர் தாசில்தார் ரமேஷ் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனை தொடர்ந்து நேற்று துப்பாக்கி தொழிற்சாலை ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் பெரியசாமி தலைமையில் 150-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்கள் துப்பாக்கி தொழிற்சாலை முன்பு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இந்தபோராட்டத்துக்கு பா.ஜ.க.வினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்