வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

கந்திலி ஒன்றியத்தில் வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.

Update: 2022-05-17 18:38 GMT
திருப்பத்தூர்

கந்திலி ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளர்ச்சிதுறையின் சார்பில் மட்றப்பள்ளி ஊராட்சியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ்  கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மைய சுற்றுச்சுவர், விசமங்கலம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் மண்வரப்பு அமைக்கும் பணி, குரும்பேரி ஊராட்சியில் கசிவு நீர்குட்டை அமைக்கும் பணி, சிம்மணபுதூர் ஊராட்சியில் மண் வரப்பு அமைக்கும் பணி, பேராம்பட்டு ஊராட்சியில் கசிவு நீர்குட்டை அமைக்கும் பணி என ரூ.22 லட்சத்து 35 ஆயிரம் மதிப்பில் நடைபெற்றுவரும் பணிகளை கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

அப்போது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்களிடம் ஊதியம் சரியாக வழங்குப்படுகிறதா என கேட்டறிந்தார்.

ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரபாவதி, அப்துல் கலீல், ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்