தொழிலாளிகள் உள்பட 4 பேர் தற்கொலை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் தொழிலாளிகள் உள்பட 4 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2022-05-17 18:22 GMT
ஓசூர்:
தொழிலாளி 
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி அருகே உள்ள அச்செட்டிப்பள்ளியை சேர்ந்தவர் நாகேஷ் (வயது 39). கூலித்தொழிலாளி. உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாகேஷ், வாழ்க்கையில் வெறுப்படைந்து கடந்த 16-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பேரிகை அருகே உள்ள பண்ணப்பள்ளியை சேர்ந்தவர் முரளி (30). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த முரளி கடந்த 13-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளி இறந்தார். இது குறித்து பேரிகை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிக்கன் கடைக்காரர் 
தளி அருகே உள்ள அகலகோட்டையை சேர்ந்தவர் ராஜசேகர் (44). கூலித் தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இவர் மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் கொடுக்க மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் நேற்று முன்தினம்  ராஜசேகர் விஷம் குடித்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஊத்தங்கரை நாராயண நகரை சேர்ந்தவர் மகபூப் பாஷா (45). சில்லி சிக்கன் கடை நடத்தி வந்தார். இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினையால் மன வேதனை அடைந்த மகபூப் பாஷா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஊத்தங்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்