நாகப்பட்டினம்
நாகை பாப்பான் சுடுகாடு அருகே கஞ்சா விற்கப்படுவதாக வெளிப்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது மோட்டார் சைக்கிளில் வைத்து கஞ்சா விற்றுக் கொண்டிருந்த அக்கரைப்பேட்டை திடீர்குப்பம் பகுதியைச் சேர்ந்த ஜெகதீஷ் (வயது 20), அக்கரைகுளம் கீழ்கரையை சேர்ந்த விமல் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.