பட்டினச்சேரி கடற்கரையில் ஆண் பிணம்

பட்டினச்சேரி கடற்கரையில் ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்

Update: 2022-05-17 18:19 GMT
நாகூர்
 நாகூர் பட்டினச்சேரி கடற்கரையில் 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகை கடலோர காவல் படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் நீலநிறம் கட்ட போட்ட கைலியும், சந்தன கலர் சட்டையும் அணிந்து இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?, கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்