அழுகிய நிலையில் மூதாட்டி பிணம்

தேனி அருகே அழுகிய நிலையில் மூதாட்டி பிணத்தை போலீசார் கைப்பற்றினர்.

Update: 2022-05-17 18:15 GMT
தேனி: 

தேனி கருவேல்நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி நல்லாயி (வயது 75). இவர் தனது மருமகள் நந்தினியுடன் (45) வசித்து வந்தார்.  இந்த நிலையில் கடந்த மாதம் 20-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நல்லாயி வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கத்தில் தேடிப் பார்த்தும் கிடைக்காததால் தேனி போலீஸ் நிலையத்தில் அவருடைய மருமகள் நந்தினி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். இந்நிலையில், பழனிசெட்டிபட்டி லட்சுமிநகரில் உள்ள ஒரு சோளத்தோட்டத்தில் அழுகிய நிலையில் ஒரு மூதாட்டி பிணம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. மேலும் இந்த தகவல் அறிந்து நந்தினியும் அங்கு வந்தார். பிணம் அழுகிய நிலையில் இருந்ததால், அதன் அருகில் கிடந்த உடைமைகளை வைத்து இறந்தது தனது மாமியார் நல்லாயி தான் என்பதை நந்தினி உறுதிப்படுத்தினார். பின்னர் அவர் இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்