மைனர் பெண்ணுக்கு திருமணம்

ஆம்பூர் அருகே மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-05-17 18:07 GMT
ஆம்பூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மைனர் பெண். இவர் 10-ம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்தார். இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் ஷூ கம்பெனி தொழிலாளியான வாலிபர் ஒருவருக்கும் கடந்த வாரம் திருமணம் நடந்தது. இதுகுறித்து சமூக நலத்துறை மற்றும் குழந்தை திருமணம் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அங்கு சென்ற அதிகாரிகள், 18 வயதுக்கு முன் திருமணம் செய்தது சட்டபடி குற்றம் எனக் கூறி மைனர் பெண்ணை மீட்டனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்