சாராயம் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

சாராயம் கடத்தல் வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்

Update: 2022-05-17 18:01 GMT
திட்டச்சேரி
நாகை மாவட்டம், திருமருகல் அருகே உள்ள தேப்பிராமங்கலம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மணிகுமார் மகன் அபிமன்யு (வயது 20). இவர் கடந்த 15-ந் தேதி அதிகாலை 3 மணி அளவில் புதுச்சேரியில் இருந்து திருவாரூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தார். அப்போது இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த திருக்கண்ணபுரம் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன், அபிமன்யுவை விரட்டி சென்று பிடிக்க முயன்றார். அப்போது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு அபிமன்யு தப்பி ஓடி விட்டார். அவர் மீது திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபிமன்யுவை தேடி வந்தனர். இந்தநிலையில்,  திருப்புகலூர் கடைத்தெருவில் இருந்த அபிமன்யூவை போலீசார் நேற்று கைது செய்தனர். 

மேலும் செய்திகள்