திருமயம் பைரவர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம்
திருமயம் பைரவர் கோவிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
திருமயம்:
தமிழ்நாடு அளவில் சசிகலா தீவிர அரசியல் பணியில் ஈடுபட்டு வருகிறார். அதனை முன்னிட்டு சென்னையிலிருந்து திருமயம் வழியாக சிவகங்கை சென்ற சசிகலாவுக்கு திருமயம் பைரவர் கோவில் அருகே தொண்டர்கள் வரவேற்பு கொடுத்தனர். பின்னர் காரில் இருந்து இறங்கி பைரவரை வழிபட்டு திருமயத்தில் இருந்து சிவகங்கைக்கு அவர் புறப்பட்டு சென்றார்.