குத்துச்சண்டை போட்டியில் 2-ம் இடம் பிடித்த வீராங்கனைகளுக்கு கலெக்டர் பாராட்டு
குத்துச்சண்டை போட்டியில் 2-ம் இடம் பிடித்த வீராங்கனைகளை கலெக்டர் பாராட்டினார்.
புதுக்கோட்டை:
2019-20-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான முதல்-அமைச்சர் கோப்பைக்கான குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகள் சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அணி வீராங்கனைகள் மாநில அளவிலான குத்துச்சண்டை விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த புள்ளி கணக்கில் 2-ம் இடம் பெற்றனர். அதற்கான வெற்றி கோப்பையினை கலெக்டர் கவிதா ராமுவிடம் வெற்றி பெற்ற வீராங்கனைகள் காண்பித்து வாழ்த்து பெற்றார்கள். வீராங்கனைகளை கலெக்டர் கவிதாராமு பாராட்டினார். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் குமரன், தடகள பயிற்றுனர் செந்தில் கணேசன், குத்துச்சண்டை பயிற்சியாளர் பார்த்திபன், அப்துல் காதர், கூடைப்பந்து பயிற்றுனர் சண்முகப்பிரியன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.