டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம்
வேளாங்கண்ணியில் டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது
வேளாங்கண்ணி
தேசிய டெங்கு தினத்தை முன்னிட்டு வேளாங்கண்ணி பேரூராட்சி அலுவலக வளாகத்திலிருந்து டெங்கு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை கீழையூர் வட்டார வேளாண்மை வளர்ச்சி குழு தலைவர் தாமஸ்ஆல்வா எடிசன் தொடங்கி வைத்தார். வட்டார வேளாண்மை வளர்ச்சிகுழு துணைத் தலைவர் மரியசார்லஸ் முன்னிலை வகித்தார். ஊர்வலம் சர்ச் சாலை, கடற்கரை சாலை, ஆரியநாட்டு சாலை வழியாக சென்று மீண்டும் பேரூராட்சியை அடைந்தது. இதில், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு நிபுணர் லியாகத்அலி கலந்துகொண்டு டெங்கு காய்ச்சல் பரவும் விதம், அதன் அறிகுறிகள், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்துவது எப்படி? என்பது குறித்து விளக்கி கூறினார். இதில், திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்த்குமார், சுகாதார மேற்பார்வையாளர் மோகன் மற்றும் பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர், பேரூராட்சி தலைவர் டயானா ஷர்மிளா டெங்கு உறுதிமொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.