அரங்கநாதன் பெயரில் நூலக கட்டிடம் அமைக்க வேண்டும்
அரங்கநாதன் பெயரில் நூலக கட்டிடம் அமைக்க வலியுறுத்தப்பட்டது
சீர்காழி
சீர்காழியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மயிலாடுதுறை மாவட்ட பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்க. சேகர் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் பிரபாகரன், வக்கீல் சுந்தரையா, மாவட்ட செயலாளர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சீர்காழி வட்ட தலைவர் வீரசேனன் வரவேற்றார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச்செயலாளர் காமராசு, வக்கீல் கணிவண்ணன் ஆகியோர் பேசினர். சீர்காழியில் பிறந்த நூலக தந்தை எஸ்.ஆர் அரங்கநாதன் பெயரில் நூலக கட்டிடம் விரைவில் தொடங்க வேண்டும். சீர்காழியில் உள்ள தமிழிசை மூவர் மணிமண்டபத்தை படிப்பகமாக மேம்படுத்த வேண்டும். பள்ளிகளில் குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வட்ட செயலாளர் சேகர் நன்றி கூறினார்.