சாத்கர் ஊராட்சியில் தேசிய டெங்கு தின உறுதிமொழி ஏற்பு

சாத்கர் ஊராட்சியில் தேசிய டெங்கு தின உறுதிெமாழி ஏற்கப்பட்டது.

Update: 2022-05-17 17:41 GMT
பேரணாம்பட்டு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் சாத்கர் ஊராட்சியில் தேசிய டெங்கு தின நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பேரணாம்பட்டு ஒன்றியக் குழு தலைவர் சித்ரா ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ஹேமலதா, சாத்கர் ஊராட்சி மன்ற தலைவர் சங்கீத பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சியில் டி.டி.மோட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி சிவக்குமார் கலந்து கொண்டு மழை காலங்களில் டெங்கு பரவாமல் தடுப்பது குறித்தும், வீடுகளில் தண்ணீர் தேங்காதவாறும், தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி பாதுகாப்பாக விழிப்புணர்வுடன் இருப்பது குறித்தும் விளக்கினார். நிகழ்ச்சியில் டெங்கு தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் பேரணாம்பட்டு ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் பொகளூர் ஜனார்த்தனன், டேவிட், சுகாதார பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்