திண்டிவனம், மூங்கில்துறைப்பட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

திண்டிவனம், மூங்கில் துறைப்பட்டில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-05-17 17:20 GMT
திண்டிவனம், 

ஆர்ப்பாட்டம்

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி கியான் வாபி மசூதிக்கு எதிரான சதிகளை முறியடிக்கக்கோரியும், வழிபாட்டு தலங்கள் சட்டப் பிரிவு 1991-ஐ அமல்படுத்தக்கோரியும் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா அலுவலகம் முன்பு எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சையத் அசன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ரஜாக், மாவட்ட செயலாளர் குரைஷி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரியாஸ் அலி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ரியாஸ் அகமது, அகமது அலி, ஷேக் முபாரக், வக்கீல் அஜ்மல் அலி உட்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின்போது அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு நான்குமுனை சந்திப்பில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மூங்கில்துறைப்பட்டு நகர தலைவர் ஜான்பாஷா தலைமை தாங்கினார். கிளைச் செயலாளர்கள் பாரூக், ரஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் தர்பார், மாவட்ட அமைப்பாளர் சிராஜூதீன் ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன உரையாற்றினார். இதில் ரிஷிவந்தியம் ஒன்றிய தலைவர் இப்ராஹிம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்