தர்மபுரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை
தர்மபுரி அருகே கட்டிட மேஸ்திரி தற்கொலை செய்து கொண்டார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் புலிகரை பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 44). கட்டிட மேஸ்திரி. இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள் உள்ளனர். வெங்கடேசனுக்கு தொடர்ந்து வயிற்று வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த வெங்கடேசன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மதிகோன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.