பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருத்தாசலத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2022-05-17 16:54 GMT
விருத்தாசலம், 

விருத்தாசலம் பாலக்கரையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் அறிவழகி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் சுகந்தி வரவேற்றார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பட்டுசாமி, அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் வட்ட தலைவர் ராவணராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் விஜய பாண்டியன் ஆகியோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வை கண்டிப்பது மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும்,  தமிழ்நாட்டில் உள்ள மதுபான உற்பத்தி ஆலைகளை உடனடியாக மூடவேண்டும். விருத்தாசலத்தில் அரசு மகளிர் தொழில்நுட்ப கல்லூரி, அரசு மகளிர் செவிலியர் கல்லூரி ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இதில் பாக்கியம், பத்மாவதி, மல்லிகா, சிவரஞ்சனி, தமிழ்மணி, செம்பாயி, அகிலரசி, ராதா, தன வள்ளி, சீதா, சுமதி, முத்துலட்சுமி, ஜெயமாலினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்