சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த ஓட்டல் தொழிலாளி கைது

சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்த ஓட்டல் தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-05-17 16:39 GMT
கரூர்
கரூர் மாவட்டம், செக்கனம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ்(வயது 24). ஓட்டல் தொழிலாளியான இவர் கரூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி அவரை கடத்தி சென்று பாலமலை முருகன் கோவிலில் வைத்து திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரூபி போக்சோவில் வழக்குப்பதிவு செய்து பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்