மண்டியா இளைஞர்களுக்கு நடிகை சன்னி லியோன் பாராட்டு

மண்டியா இளைஞர் ஒருவருக்கு நடிகை சன்னி லியோன் பாராட்டுகளை தெரிவித்துள்ளது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Update: 2022-05-17 16:22 GMT
ஆபாச நடிகையான சன்னிலியோனின் பிறந்தநாள் சமீபத்தில் கொண்டாடப்பட்டது. அவர் கடந்த 13-ந் தேதி தனது 41-வது வயதில் அடியெடுத்து வைத்தார். இதையடுத்து சன்னி லியோனின் பிறந்தநாளை உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். மேலும் சன்னி லியோனுக்கு அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த நிலையில் மண்டியா (மாவட்டம்) தாலுகா கொம்மேரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சன்னி லியோனுக்கு கட்-அவுட் வைத்து கேக் வெட்டி அவரது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினர். இதுதொடர்பான புகைப்படங்கள் செய்தித்தாள்கள், ஊடகங்களில் வெளியாகின. அதைப்பார்த்து மகிழ்ச்சி அடைந்த சன்னி லியோன் மண்டியா இளைஞர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார். அவர், மண்டியா இளைஞர்கள் தனக்கு கட்-அவுட் வைத்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.

மேலும் செய்திகள்