மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த மின்வாரிய ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி சாவு
மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த மின்வாரிய ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
பந்தலூர்
மின்சாரம் தாக்கி படுகாயம் அடைந்த மின்வாரிய ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கியது
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே உள்ள நாடுகாணி பொன்னூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (வயது 49). இவர் உப்பட்டி துணை மின்நிலையத்தில் மின்பாதை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். திடீரென்று மின்தடை ஏற்பட்டது. அப்போது ஆனந்தராஜ் சீரமைப்பு பணியில் ஈடுப்பட்ட போது திடீரென்று மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தார். இதனை கவனித்த சக ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்ததோடு, படுகாயம் அடைந்த ஆனந்தராஜை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
சிகிச்சை பலனின்றி சாவு
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி ஆனந்தராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கி மின்வாரிய ஆய்வாளர் ஒருவர் இறந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.