போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள்; கலெக்டர் தகவல்
கல்வி தொலைக்காட்சியில் அரசுப்பணி போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் நடக்கிறது என்று கலெக்டர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை
தமிழக முதல்-அமைச்சரால் கல்வி தொலைக்காட்சியில் போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், பணியாளர் தேர்வாணையம், ரெயில்வே தேர்வு வாரியம், வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் போன்ற முகமைகளால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கான கலந்துரையாடல்கள், ஊக்க உரைகள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாள் ஆய்வு மற்றும் நடப்பு நிகழ்வுகள் தினமும் காலை 7 மணியில் இருந்து 9 மணி வரையும், இதன் மறுஒளிபரப்பு இரவு 7 மணியில் இருந்து 9 மணி வரையும் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன.
இதே நிகழ்ச்சியினை TN career services employment என்ற youtube-ல் அடுத்தடுத்த நாட்களில் காணலாம். மேலும் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் இவ்வனைத்து தேர்வுகளுக்கான மென்பாடக் குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை சார்ந்த போட்டி தேர்விற்கு தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த தகவலை திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் தெரிவித்து உள்ளார்.