கலவையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
கலவையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
கலவை
கலவை பேரூராட்சியில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. பேரூராட்சிமன்ற தலைவர் கலா சதீஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் நீலாவதி தண்டபாணி முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் வெங்கடேசன் வரவேற்பறார். கலவை பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் மகளிர் குழுவினர்,பேரூராட்சி ஊழியர்கள் கலந்துகொண்டு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கினர்.
தண்ணீர் தேங்காமல் பாதுகாப்பாக இருக்கவேண்டும், அம்மிக்கல், பிளாஸ்டிக் டப்பா, டயர் போன்றவற்றை அகற்ற வேண்டும், காய்ச்சல் ஏற்பட்டால் அருகில் உள்ள சுகாதார மருத்துவமனை அணுகவேண்டும் என்று கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சுகாதார மேற்பார்வையாளர் வெங்கடேசன், இன்ஸ்பெக்டர்கள் சரவணமூர்த்தி, பிரபாகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சோட்டேபாய், புண்ணியகோட்டி, நித்தியா மணிகண்டன், கீதா, சேகர், யுவராஜ், விக்னேஷ் மற்றும் ஊராட்சி மன்ற ஊழியர்கள் பலர்கலந்து கொண்டனர்.