பாம்பு கடித்து இளம்பெண் சாவு
சேத்துப்பட்டு அருகே பாம்பு கடித்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
சேத்துப்பட்டு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகே உள்ள மதுர கருங்கல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகள் திவ்யா (வயது 19). இவரை, பாம்பு கடித்துள்ளது.
இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.